ஃபேஸ்புக் நிறுவனம் இயக்கிவரும் வாட்ஸ்அப் செயலியில் புதிதாக இரண்டு அப்டேட்களை அந்நிறுவனம் சேர்த்துள்ளது.


உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக திகழ்ந்து வரும் வாட்ஸ்அப் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அதன்படி புதிதாக ஜிஃப் பைல்களைத் தேடும் வசதியும், புகைப்படத்துடன் இடத்தைச் சேர்த்து பதிவிடும் வசதியும் வெளியாக உள்ளன.  

பயனர்கள் தங்களுக்கு தேவையான ஜிஃப் பைல்களைத் தேடி அதனை அனுப்பும் வசதியை வாட்ஸ்அப்பில் சோதனை ஓட்டமாகத் தற்போது செயல்படுத்திவரும் ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் அதனை அதிகாரபூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பயனர்கள் ஒரு இடத்தில் இருந்துகொண்டு அதன் தகவல்களை லொக்கேஷன் என்ற வசதி மூலம் பதிவிடும் வசதி இருந்துவருகிறது. அதிலும் தற்போது ஒரு ஸ்டிக்கருடன் பயனர்கள் இருக்கும் இடத்தையும், நேரத்தையும் சேர்த்து பதிவிடும் வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் சோதனை ஓட்டமாக வெளியிட்டுள்ளது.

இதனால் பயனர்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் லொக்கேஷன் வசதியைப் பகிர்ந்துகொள்ள முடியும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி புதிய ஸ்டிக்கர்ஸ்களை வருகிற அப்டேட்டில் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.