சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வில், சென்னை மாவட்டத்தில், மூன்று அரசு பள்ளி உள்பட, 194 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.பத்தாம் வகுப்பு தேர்வில், சென்னை மாவட்டத்தில், 28 அரசு பள்ளிகள் உள்பட, 567 பள்ளிகளை சேர்ந்த, 50 ஆயிரத்து, 135 பேர் தேர்வு எழுதினர்.
இவர்களில், 47 ஆயிரத்து, 225 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில், 93.86 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு, 94.20 சதவீதமாக அதிகரித்துள்ளது.இதில், சைதாப்பேட்டை, அரசு மாதிரி மேல்நிலை பள்ளி, பிராட்வே, ஆசிர்வாதபுரம், அரசு முஸ்லிம் பெண்கள் உயர்நிலை பள்ளி மற்றும் கொடுங்கையூர் அரசு உயர்நிலை பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இது தவிர, 191 தனியார் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.இந்த தேர்வில், சென்னை மாவட்டத்தில், 381 பேர், 481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 3,203 பேர், 451 - 480க்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர். 3,852 பேர், 426 - 450க்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர். மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில், சென்னை கல்வி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதமும், மாணவர்கள் மதிப்பெண்ணும் குறைவாகவே உள்ளது.
பொதுத் தேர்வில், மற்ற மாவட்டங்கள், 98 சதவீதம் வரை தேர்ச்சியும், அதிக அளவுக்கு, 100 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ள நிலையில், சென்னை கல்வி மாவட்டம், தொடர்ந்து பல ஆண்டுகளாக பின்தங்கியே காணப்படுகிறது.

0 Comments