மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சிப்பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சென்னையில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவபல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களை சந்தித்து கூறியதாவது:
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் கடந்த ஆண்டுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. பிஎஸ்சியில் 20 பட்டப்படிப்புகளும், 16 டிப்ளமோ படிப்புகளும் உள்ளது. வகுப்புகள் பல்கலைக்கழகத்தில் நடக்கும். இதற்கான பயிற்சிகள் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடைபெறும்.பிஎஸ்சி படிப்புகள் 4 வருடங்கள். இதில், 3 வருடங்கள் மாணவ, மாணவிகள் படிப்பார்கள். ஒரு வருடம் பயிற்சியில்ஈடுபடுவார்கள். டிப்ளமோவில் 2 வருடங்கள் படிப்பார்கள். 6 மாதம் பயிற்சியில் ஈடுபடு வார்கள்.பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப்பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த படிப்புகளை படிக்க ரூ. 18 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.
கடந்தாண்டு 10 படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. 200 இடங்களில் 32 இடங்கள் மட்டுமே நிரம்பியது. எனவே, இந்தாண்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, பல்கலைகழகத்தின் பதிவாளர் பாலசுப்ரமணி உடனிருந்தார்.

0 Comments