பல்வேறு பணிகள் காரணமாக, உள்ளாட்சி தேர்தலை, அக்டோபரில் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுஉள்ளது.
அக்டோபர் உள்ளாட்சி தேர்தல்? தேர்தல் கமிஷன் திட்டம்!
தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என்ற, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கான தேர்தல், 2016 அக்டோபரில் நடக்கவிருந்த நிலையில், உயர் நீதிமன்ற தடையால், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.இறுதி செய்யப்படும்.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை, அக்டோபரில் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.
இதுதொடர்பாக, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய வார்டுகள் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, வார்டுகள் மறு வரையறை ஆணையம்உத்தரவிட்டுள்ளது.இதனால், புதிய வார்டுகள் பட்டியல், இம்மாத இறுதிக்குள், மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு வந்து விடும். பின், பட்டியல் சரிபார்க்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதைதொடர்ந்து, பெண்கள், ஆதிதிராவிட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு, வார்டுகள் பட்டியல் இறுதி செய்யப்படும். பின், உள்ளாட்சி தேர்தலை நடத்த, புதிய வார்டுகள் அடிப்படையில், வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். இதுபோன்ற நிலுவையில் உள்ள பணிகள் முடிவதற்கு செப்., மாதமாகி விடும். எனவே, உள்ளாட்சி தேர்தலை, அக்டோபரில் நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments