தமிழக சட்ட மன்ற, பாராாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களுடன் தலைமை செயலகம் நோக்கி சென்றுள்ள TET நிபந்தனை ஆசிரியர்களின் மனுக்கள்.
கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 நடைமுறையில் தமிழக அமலாக்கத்தில் சற்று தாமதம் மற்றும் நடைமுறை சிக்கலும் ஏற்பட்டது . அரசு மற்றும் சிறுபான்மையினர் அற்ற அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றனர். இதனிடையே ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக எழுந்த சர்ச்சை காரணமாக TET ல் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற அறிவிப்பும் சற்றே தாமதமாக தமிழக அரசு அறிவித்தது. அன்றிலிருந்து இன்று வரை 23/08/2010 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த சூழலில் சிக்கி தவிப்பதால், ஒரு தவிர்ப்பாணை வேண்டி கோரிக்கைகள் வைத்துக் கொண்டு உள்ளனர்.
இது சம்மந்தமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் என அனைவரிடமும் ஓரு தெளிவற்ற சூழல் நிலவி வருகிறது. இவ்வகை ஆசிரியர்களுக்கு பணப் பலன்கள் கல்வி மாவட்டங்கள் தோறும் கிடைத்தும், கிடைக்கப் பெறாமலும் மாறி உள்ளன.
இது சம்மந்தமாக பல்வேறு நாளிதழ்களில் அவ்வப்போது செய்திகள் வந்த நிலையில், தற்போது இந்த வகை TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க தமிழக சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் உதவ முன் வந்து உள்ளனர்.
மாண்புமிகு க.பாஸ்கரன் ( கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை)
மாண்புமிகு ஆர்.வைத்தியலிங்கம் ( ராஜ்யசபா உறுப்பினர் )
மாண்புமிகு ஆர்.கோபால கிருஷ்ணன் ( பாராளுமன்ற உறுப்பினர் - மதுரை )
மாண்புமிகு கே.ஆர்.பி.பிரபாகரன் ( பாராளுமன்ற உறுப்பினர் - நெல்லை )
மாண்புமிகு எஸ். டி.கே.ஜக்கையன் ( ச.ம.உ - கம்பம் )
மாண்புமிகு கி.மாணிக்கம் ( ச.ம.உ - சோழவந்தான் )
மாண்புமிகு பா.நீதிபதி ( ச.ம.உ - உசிலம்பட்டி )
மாண்புமிகு எஸ். எஸ். சரவணன் ( ச.ம.உ - மதுரை தெற்கு )
மாண்புமிகு கி.செல்வ மோகன் தாஸ் பாண்டியன் ( ச.ம.உ - தென்காசி )
மாண்புமிகு பி.ஆர்.ஜி.அருண்குமார் ( ச.ம.உ - கோவை வடக்கு )
மாண்புமிகு ஆர்.சந்திரசேகர் ( ச.ம.உ - மணப்பாறை தொகுதி )
ஆகியோர் தங்களது பரிந்துரைக் கடிதங்களை கொடுத்துள்ளனர்.
அந்த கடிதங்கள் அனைத்தையும் நகலெடுத்து அதனுடன் கோரிக்கை மனுவையும் இணைத்து பதிவு தபால் வழியாக, இந்த சிக்கலில் தவிக்கும் ஆசிரியர்கள் பலரும் தலைமைச் செயலகம் அனுப்பி உள்ளனர்.
இவை அனைத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு தமிழக துணை முதல்வர், மாண்புமிகு கல்வி அமைச்சர், மதிப்புமிகு முதன்மை செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் ஆகியோரின் மேலான கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஏற்கனவே இந்த பிரச்சினை காரணமாக மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சரை கடந்த மாதம் சந்தித்த போது விரைவில் நல்ல தீர்வு கிடைக்க தமிழக அரசு வழி வகை செய்யும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த மனு/கடிதங்கள் கட்டாயம் அதை விரைவு படுத்தும் எனவும் கூடவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் , கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து விலக்கு என்ற தவிர்ப்பு ஆணை வெளிவரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவஞானம் தெரிவித்தார்.

0 Comments