பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு தட்கல் விண்ணப்பப் பதிவு அறிவிப்பு


பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், தட்கல் விண்ணப்பப் பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:


பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுத, தனி தேர்வர்களாக விண்ணப்பிக்காதோர், தட்கல் திட்டத்தில், கூடுதலாக, 1,000 ரூபாய் செலுத்தி, விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு கல்வி மாவட்டத் திலும், அரசு தேர்வு துறை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மையங்களின் முகவரி மற்றும் தேர்வுக்கான தகுதி விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 
 

தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஜன., 21, 22ம் தேதிகளில், தேர்வு துறை சேவை மையம் சென்று, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த ஆண்டு, பிளஸ் 2 ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், 600 மதிப்பெண்களுக்கு, புதிய முறையில் தேர்வு நடத்தப்படும். ஏற்கனவே, 1,200 மதிப்பெண் முறையில் தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதோர், வரும், மார்ச் மற்றும் ஜூன் தேர்வுகளில், தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு பின், பழைய தேர்வு முறையில், தேர்வு எழுத முடியாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.