போராட்டத்தை கைவிட முதல்வர் வேண்டுகோள்!
ஜாக்டோ ஜியோ போராட்டக்காரர்கள்இன்று பணிக்கு திரும்ப வேண்டுமெனதமிழக அரசுகெடு விடுத்திருந்தநிலையில், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்போராட்டத்தை கைவிட வேண்டும் எனமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நூற்றுக்கணக்கானோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட தமிழக அரசு கெடு விதித்தும், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனது. இந்நிலையில், இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் ஊதிய உயர்வு, அகவிலைப்படி ஆகியவை ஒழுங்காகவழங்கப்படாதநிலையில் கூடதமிழக அரசு, 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கியதாக முதல்வர் தெரிவித்துள்ளார். சுயநலத்தை மற்றும் கருத்தில் கொள்ளாமல், மக்களை நலனையும் நினைத்து நாளையே பணிக்கு திரும்ப வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments