உலக நாடுகளின் தேசிய கொடியை காட்டி நாட்டை சரியாக கூறிய அரசு பள்ளி ஆசிரியையின் மகளுக்கு கலெக்டர் நேரில் வாழ்த்து



உலக நாடுகளின் தேசிய கொடியை அடையாளம் காட்டும் சிறுமிக்கு, கலெக்டர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 50; டூல்ஸ் வியாபாரி. இவரது மனைவி சுபஸ்ரீ, 38, அரசு பள்ளி ஆசிரியை. தம்பதியின் மகள் நிகிதா, 4, தனியார் பள்ளியில், யு.கே.ஜி., படிக்கிறார். இவர், உலக நாடுகளின் தேசிய கொடிகளை அடையாளம் காட்டியும், அந்த நாட்டின் பெயர், இந்திய நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களின் பெயர்களையும் கூறி அசத்தி, அதன் வீடியோவை, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், கலெக்டரை சந்திக்க விரும்புவதாகவும், தானும் கலெக்டராகி, தங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தருவேன் எனவும் கூறியிருந்தார்.

இதை, சமூகவலைதளங்களில் பார்த்த கலெக்டர் கந்தசாமி, நிகிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார். மேலும், டைரி, கலர் பென்சில், ஸ்கெட்ச், ஸ்வீட் மற்றும் பழங்கள்வழங்கி பாராட்டினார்