LKG & UKG பாடத்திட்டம் தயார்
தமிழக பள்ளி கல்வியில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி.,க்கான பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை, முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வி துறையின் அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் பள்ளிகளில், இதுவரை, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மட்டுமே பாடத் திட்டம் உள்ளது.
பள்ளி கல்வியின் அங்கமான, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், புதிய பாட திட்டங்கள் மற்றும் பாட புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் அச்சடிப்பு மற்றும் வினியோக பணியை, தமிழக பாடநுால் மற்றும் கல்வி சேவைகள் கழகம் மேற்கொள்கிறது.
இந்நிலையில், பள்ளி கல்வி சார்பில், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளியில், புதிதாக, எல்.கே.ஜி., மற்றும், யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மாநிலம் முழுவதும், தொடக்க பள்ளிகளுக்கு அருகேயுள்ள உள்ள அங்கன்வாடி மையங்களிலும், கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.வரைவு அறிக்கைமேலும், 2,381 அங்கன்வாடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டு, தொடக்க பள்ளிகளுடன், கே.ஜி., வகுப்புகளுக்காக இணைக்கப்பட்டுள்ளன.
இதற்கான துவக்க விழா, 21ம் தேதி நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தமிழக பள்ளி கல்வியில் முதல் முறையாக, எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, பாட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாட திட்டம், அக்டோபரில் வரைவு அறிக்கையாக வெளியிடபட்டு, பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன.அவற்றின் அடிப்படையில், எஸ்.சி.இ. ஆர்.டி.,யின் நிபுணர் குழு பாட திட்டத்தை இறுதி செய்துள்ளது.
இந்த அறிக்கை, முதல்வரின் ஒப்புதலுக்காக, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழக அரசின் ஒப்புதல் பெற்று, அரசாணை வெளியிட்டதும், பாட திட்டம் வெளியிடப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments