பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு 266 தேர்வு புதிய மையங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள 4,200 தேர்வு மையங்களுடன், இவ்வாண்டு 266 தேர்வு மையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள 4,200 தேர்வு மையங்களுடன், இவ்வாண்டு 266 தேர்வு மையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடக்கும்போது தேவையான பாதுகாப்பு, கேள்வித்தாள், மதிப்பெண் வழங்கும் முறை குறித்த விதிமுறை வெப்சைட் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. அதன்மூலம், கேள்விகளுக்கு வழங்கப்படும்
மதிப்பெண் விவரத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.
கடந்த காலத்தில் 25 முதல் 30 கி.மீ. தூரமாக இருந்த தேர்வு மையங்கள் தற்போது 10 கி.மீ தூரத்துக்குள் மாற்றப்பட்டு உள்ளது. மலை பகுதி மாணவர்கள் தேர்வு எழுத வாகனம் ஏற்பாடு செய்ய முடியாது. ஆசிரியர் சம்பளம் மற்றும் 14 பொருட்கள் வழங்குதல் என செலவு உள்ளது. வரியும் போடக்கூடாது, வரி இல்லாத பட்ஜெட் தேவை என்ற நிலையில் கூடுதல் செலவினங்களை செய்ய முடியாது.
கல்வித்துறைக்காக ஆண்டிற்கு 28,759 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. வரி சுமை இல்லாமல் இந்த ஆண்டு கல்வித்துறைக்கு கூடுதலாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரு ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும்.
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
0 Comments