தமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது


தமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது என்று பட்ஜெட் உரையில்துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 
இது குறித்து பட்ஜெட் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:  பள்ளிக் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நலத் திட்டங்களும், முயற்சிகளும் அண்மைக்காலமாக சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதன் விளைவாக,  கற்றல் திறன் மேம்பட்டுள்ளதுடன் தொடக்க நிலை வகுப்புகளில் நிகர சேர்க்கை விகிதம் 99.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2011-2012-ஆம் நிதியாண்டில் 63,178 ஆக இருந்த தொடக்கப் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2018-2019-ஆம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளது.

 கடந்த 2018-ஆம் ஆண்டு கல்வி நிலை அறிக்கையின்படி (அநஉத) அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் ஒட்டுமொத்தமாக முன்னேறியுள்ளது என்பதுடன் தனியார் பள்ளி மாணவ, மாணவியருடன் ஒப்பிடும்போது, அரசுப்பள்ளி மாணவர்கள் கூடுதல் வேகத்தில் முன்னேறி வருகின்றனர்.விலையில்லா பொருள்கள்:  புத்தகப் பைகள்,  நோட்டுப் புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் உள்படமாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கும் நலத் திட்டங்களுக்காக 2019-2020-ஆம் நிதியாண்டில் ரூ.1,656.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று அரசுப் பள்ளிகளுக்கு போதுமான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக நபார்டு வங்கியின் கடனுதவியுடன் ரூ.381.31 கோடி செலவில்வகுப்பறைகள் கட்டுதல்,  ஆய்வகங்கள்,  கழிப்பறைகள்,பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.