மத்திய அரசு ஊழியருக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, அகவிலைப்படியை, 3 சதவீதம் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால், 1.1 கோடி பேர் பயன் பெறுவர். 

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, தற்போது, 9 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இத்துடன், தற்போது, மேலும், 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிது.

இத்தகவலை, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார்.