8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சிறிய மடிக்கணினி - அமைச்சர் செங்கோட்டையன்


8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவியருக்கு விலையில்லா சிறிய மடிக்கணினிவழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தேனியில், நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு நூற்றாண்டு விழா நடைபெற்றது.விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது,மாணவர்களுக்கு 14 வகையான கல்வி உபகரணங்கள் கொடுத்தது, மடிக்கணினி கொடுத்தது, விலையில்லா சைக்கிள்கள் மற்றும் பாடப் புத்தகங்கள்,என எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார். மேலும், தமிழகம் முழுவதும் ஒரே கல்வி முறை அமுல்படுத்தப்படும் என்றும், 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் என்று தெரிவித்தார். புதிதாக மூவாயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றுகூறினார்.