Jactto-Geo : போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து - உயர்கல்வித்துறை அறிவிப்பு!
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கையை உயர்கல்வித்துறை ரத்து செய்துள்ளது.
ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பாக கடந்த மாதம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற அரசு கல்லூரி பேராசிரியர்கள் 28 பேரை பணி இடைநீக்கம் செய்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் அவர்கள் மீதான பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சங்க நிர்வாகிகளாக இருக்கக்கூடிய 17 பேராசிரியர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
0 Comments