Plus 2 தனி தேர்வருக்கு நாளை, 'ஹால் டிக்கெட்'
பிளஸ் 2 தனி தேர்வர்கள், 'ஹால் டிக்கெட்' டை நாளை பெறலாம் என தேர்வுத் துறை அறிவித்து உள்ளது. பிளஸ் 2 பொது தேர்வு மார்ச் 1ல் துவங்குகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்கள் நாளை பிற்பகல் முதல் தங்கள் ஹால் டிக்கெட்டை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வுக்கான விபரத்தை தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாமல் யாரும் தேர்வில் பங்கேற்க முடியாது. இந்த தகவலை தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்து உள்ளார்.
0 Comments