TNPSC - குரூப் - 2' தேர்வில், விடைத்தாளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு
குரூப் - 2' தேர்வில், விடைத்தாளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 2ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, முதல்நிலை தேர்வு, 2018, நவ., 11ல் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிரதான எழுத்து தேர்வு, நாளை மறுநாள், 15 மாவட்டங்களில் நடக்கிறது. முதன்மை எழுத்து தேர்வில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாளை மறுநாள் நடக்க உள்ள முதன்மை எழுத்து தேர்வில், வினா மற்றும் விடை எழுதும் தாள், ஒருங்கிணைந்த புத்தகமாக வழங்கப்படும். அதில், ஒவ்வொரு கேள்விக்கும் கீழே, வழங்கப்பட்டிருக்கும் இடங்களில் மட்டுமே தேர்வர்கள் விடை அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
0 Comments