குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் போலீஸ் டி.எஸ்.பியாக தேர்வு
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஆர்.வடிவேல் (வயது 37). இவர் பிஎஸ்ஸி (கணிதம்) எம்.ஏ.பிஎட். (வரலாறு) பட்ட படிப்பு முடித்து, அம்மா பேட்டை அருகே உள்ள மறவபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். கடந்த 17.01.2002 முதல் இன்று வரை 17 வருடங்களாக அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார் இவர் ஐ.ஏ.எஸ். கனவுடன் இரண்டு முறை சிவில் சர்வீஸ் தேர்வும் எழுதியுள்ளார்.
கடந்த 2013 முதல் 3 முறை குரூப் 1 தேர்வுகள் எழுதப்பெற்று முதல் முறையாக நேர்முக தேர்வில் கலந்து கொண்டு டி.எஸ்.பியாக தேர்வு பெற்றுள்ளார்.டி.எஸ்.பி.யாக தேர்வு பெற்ற இவரை சக ஆசிரியர்களும் அப்பகுதி பொதுமக்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
0 Comments