பிளஸ் 1 தேர்வு இன்றுடன் முடிகிறது
தமிழகம், புதுச்சேரியில் 8.21 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ-மாணவியர் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 5 ஆயிரத்து 32 பேர் தேர்வு எழுதினர். மொத்தமாக 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவ- மாணவியர் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இந்த தேர்வை எழுதினர்.
இந்த தேர்வில் வேலூர், கடலூர், உட்பட பல சிறையில் உள்ள 78 கைதிகள் புழல் சிறையில் தேர்வு எழுதினர்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்வு நடத்தி, ஏப்ரல் மாதம் விடைத்தாள் திருத்தி, மே மாதம் தேர்வு முடிவுகளை அறிவிக்க தேர்வுத்துறை திட்டமிட்டது.
இதன்படி தேர்வுகள் தற்போது நடந்து வருகின்றன.
அதில் பிளஸ் 2 தேர்வு கடந்த 19ம் தேதி முடிந்தன. பிளஸ் 1 தேர்வு இன்றுடன் முடிகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு 29ம் தேதி முடிய உள்ளன. இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வில் பறக்கும் படையினரால் பிட் அடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
பிளஸ் 1 தேர்வின் இறுதி நாளான இன்று, தொடர்பு ஆங்கிலம், எதிக்ஸ், கணினி அறிவியல், சிறப்பு தமிழ்,புள்ளியியல், மனையியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கின்றன.
0 Comments