தேர்தல் பணி செய்ய மறுத்த 26 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு
தேர்தல் பணி செய்ய மறுத்த 26 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த 26 ஆசிரியர்கள் தேர்தல் தொடர்பான பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர். பூத் அளவிலான அதிகாரிகள் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.
அதன்படி கடந்த ஆண்டு ஜூன் முதல் கடந்த பிப்ரவரி வரை அவர்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பணிகளை செய்திருக்க வேண்டும்.ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் யாரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் பணிகளை செய்யவில்லை.இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.அதன்பேரில் போலீசார் தேர்தல் பணியை செய்ய மறுத்ததாக ஆசிரியர்கள் 26 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments