டெல்லிக்கு எளிது; தமிழகத்துக்கு கடினம் வினாத்தாள் விஷயத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியது சிபிஎஸ்இ
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் ஒவ்்வொரு ஆண்டும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கம். இந்த ஆண்டும் தேர்வில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் யுடியூப்பில் சில பாடங்களுக்கான கேள்வித்தாள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் வணிகவியல், வேதியியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் இடம் பெற்று இருந்தன.
இதையடுத்து பெற்றோர் தரப்பில் பல புகார்கள் சிபிஎஸ்இக்கு வந்தன. அதன்பேரில் டெல்லி போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இதுதவிர சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கு நடத்திய கன்னட மொழிக்கான தேர்வில் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்துள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்துள்ளனர்.
இதையடுத்து பெற்றோர் பலர் ஒன்று சேர்ந்து பிரதமர் நரேந்திரமோடிக்கு டிவிட்டரில் புகார் அனுப்பியுள்ளனர். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரும் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அந்த தேர்வுக்கு சலுகை மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று நடந்த வேதியியல் தேர்வும் மாணவர்களுக்கு சோதனையை ஏற்படுத்திவிட்டது. தேர்வு அட்டவணை வெளியிட்ட போது, வேதியியல் பாடத்தில் மடக்கு அட்டவணை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலில் இருந்தனர்.
இது குறித்து மாணவர்கள் தரப்பில் வந்த புகார்களின் அடிப்படையில், அவசரம் அவசரமாக நேற்று சிபிஎஸ்இ ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு, மடக்கு அட்டவணை பயன்படுத்த அனுமதி வழங்கியது. இதனால் மாணவர்கள் கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருந்தது.
அத்துடன் வேதியியல் கேள்வித்தாளில் முற்றிலும் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் நேரடியான கேள்விகள் கேட்கப்பட்டதால், விடை எழுத சிரமப்பட்டனர். கேள்விகளுக்கு விடை எழுத அதிக நேரம் தேவைப்பட்டது.
வேதியியல் தேர்வில் தென் மண்டலத்துக்கான கேள்வித்தாள் கடினமாக இருந்துள்ளது. டெல்லி மண்டலத்துக்கான கேள்வித்தாள் எளிதாக இருந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
0 Comments