மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கினார்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா



புதுக்கோட்டை,மார்ச்.2:  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை  மாவட்டத்தின் சார்பாக 6 முதல் 14 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான  உதவி உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.   

 விழாவிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  இரா.வனஜா தலைமை வகித்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கினார்.

 விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்(பொ)     மு.மாரிமுத்து, உதவித்திட்ட  ஒருங்கிணைப்பாளர்      இரவிச்சந்திரன்  ,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. பழநிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 336 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன .

முதற்கட்டமாக 21 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாத நாற்காலி ,காதோலி கருவி, மூன்று சக்கர வண்டி, உள்ளிட்ட 30 உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் பள்ளித் துணைஆய்வாளர் ஜெயராமன்,மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள்,பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், சிறப்பாசிரியர்  பாஸ்கர், இராஜகுமாரி, அமலாசெல்வக்குமாரி ,  இராஜேஸ்வரி , ஜெபமாலை மேரி, தேவிகா,     ஆரோக்கிய குளோரி, பேபி, ஆகியோர் செய்திருந்தனர்.