வேதியியல், 'அக்கவுன்டன்சி' தேர்வில் நுண் அறிவை சோதிக்கும் வினாக்கள்
பிளஸ் 2 தேர்வில், வேதியியல் மற்றும் 'அக்கவுன்டன்சி' எனப்படும் கணக்குப் பதிவியல் வினாத்தாள்கள், நுண் அறிவை சோதிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தன.
ஒரு வார்த்தை விடுபட்டதால், மூன்று மதிப்பெண் கேள்வியில் மாணவர்கள் திணறினர்.பிளஸ் 2 மாணவர்களுக்கு, வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது.வேதியியலில், 33ம் எண் கேள்வியில், 'கிளர்வுறும் ஆற்றல்' என்ற வார்த்தைக்கு பதில், 'ஆற்றல்' என்ற வார்த்தை மட்டுமே இடம் பெற்றது; 'கிளர்வுறும்' என்ற வார்த்தை விடுபட்டிருந்தது. 'சென்டம்' பெறலாம்அந்த கேள்விக்கு பல மாணவர்கள் விடை அளிக்க சிரமப்பட்டனர்.
வேதியியல் வினாத்தாளின் தன்மை குறித்து, வேலுார் தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், கோபிநாதன், சென்னை, முகப்பேர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், ஸ்ரீதர் ஆகியோர் கூறியதாவது:
இதுவரை நடந்த தேர்வுகளில், கணக்கு இடம் பெற்றதில்லை. இப்போது தான் முதல் முறையாக, ஐந்து மதிப்பெண்ணில், 37வது கேள்வியில், ஒரு கணக்கு கேட்கப் பட்டிருந்தது. மாணவர்களின் தேர்ச்சிக்கு பாதிப்பில்லை. ஒரு மதிப்பெண்ணில், 3; இரண்டு மதிப்பெண்ணில், 2; மூன்று மதிப்பெண்ணில், 2 கேள்விகள், மாணவர்களை யோசிக்க வைப்பதாக இருந்தன.ஐந்து மதிப்பெண் கேள்விகள், எளிமையாக இருந்தன. அவற்றில், ஒவ்வொரு பிரிவுக்கும், எவ்வளவு மதிப்பெண் என, குறிப்பிட்டிருக்கலாம். பாடங்களை முழுமையாக படித்தவர்கள், 'சென்டம்' பெறலாம். இதுபோன்ற கேள்விகள் தொடர்ந்தால், மாணவர்கள் எளிதாக போட்டிதேர்வுக்கு தயாராகி விடுவர். பாடத்தின் பின்பக்க கேள்விகள், புதிய கேள்விகள் என, தரமாக இருந்தன.இவ்வாறு அவர்கள் கூறினர்.சி.ஏ., தேர்வுக்கு சாதகம்கணக்கு பதிவியல் தேர்வில், கடினமான வினாக்கள்இடம் பெற்றன. இந்த வினாத்தாளில், அதிக மதிப்பெண் பெற்றால், மாணவர்கள், சி.ஏ., தேர்வை எழுத சாதகமாக இருக்கும் என, கூறப்படுகிறது.
சென்னை, சவுகார்பேட்டை,எம்.பி.யு., மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்,ஆனந்தன் கூறியதாவது:
மொத்தம், 60 மதிப்பெண்களுக்கு நேரடி கேள்விகளும், மற்றவை பாடங்களில் உள்ள அம்சங்களை பயன்படுத்தும் வகையிலும் இருந்தன. நுணுக்கமாக சிந்தித்து பதில்எழுதும் வகையில், 10 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் இடம் பெற்றன. 30ம் எண் கேள்வியில், தேய்மானதொகை கணக்கிடுவது தொடர்பாக, கணக்கு தரப்பட்டு உள்ளது.ஆனால், புத்தகத்தில் இந்த கணக்குக்கானதியரி மட்டுமே உள்ளதால், நுண் அறிவை பயன் படுத்தினால் மட்டுமே, அதற்கு பதில் எழுத முடியும். பாடங்களை முழுவதுமாக படித்தவர்கள் மட்டும், நுாற்றுக்கு நுாறு பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த தேர்வில், வேதியியலில் இரண்டு தனியார் பள்ளி மாணவர்கள், கணக்கு பதிவியலில், தலா, ஒரு தனியார் பள்ளி மாணவர் மற்றும் தனி தேர்வர், முறைகேட்டில் சிக்கினர்.
0 Comments