வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு



புதுதில்லியில் உள்ள இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Income Tax Inspectors - 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Tax Assistants - 18

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் எழுத்துகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer Grade - II - 08

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்திற்கு சுருக்கெழுத்தில் எழுதி அதனை ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 50 வார்த்தைகளும், அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 65 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: MultiTasking Staff - 08

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

விளையாட்டு தகுதி: சம்மந்தப்பட்ட விளையாட்டுப்பிரிவில் சர்வதேச, தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு பிரிவுகளை அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Deputy Commissioner of Income -Tax (Hqrs-Personnel),
Room No.378 A, 
C.R.Building, 
I.P.Estate, 
New Delhi - 110 002

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.incometaxindia.gov.in/Lists/Latest%20News/Attachments/302/Advertisemen_MiscComm_11_3_19.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2019