அரசு தொடக்கப்பள்ளிகளில் அரசு செலவில் வாங்கப்பட்ட நாளிதழ்கள், எடைக்கு விற்று பணத்தை ஒப்படைக்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் அரசு செலவில் வாங்கப்பட்ட நாளிதழ்களை எடைக்கு விற்று பணத்தை ஒப்படைக்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் 2018 - 2019-ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் பொது அறிவு, மொழித்திறனை வளர்த்துக்கொள்ள பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் அரசு செலவில் தினமும் நாளிதழ்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவ்வாறு வாங்கப்பட்ட நாளிதழ்களை பள்ளிகளுக்கு அருகில் உள்ள பழைய இதழ்களை எடைக்கு வாங்கும் கடைகளில் விற்று அந்தப் பணத்தை டி.டி.யாக எடுத்து வட்டாரக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் தரும் டி.டி.க்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சென்னையில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தில் நேரிலும் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments