School Morning Prayer Activities - 13th March 2019

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:- 13th March 2019

திருக்குறள் : 149

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

உரை:

கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.

பழமொழி:

Many hands make work light

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

பொன்மொழி:

தாராள மனம் படைத்த முதலாளி அவரது தொழிலாளி எவரையும் எந்நாளும் கைவிட மாட்டார்.

- ஜி.டி.நாயுடு

இரண்டொழுக்க பண்பாடு :

1) விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற பிற உயிர்களை கல்லால் அடித்து கஷ்டப் படுத்த  மாட்டேன்.

2) சிறு உயிரினங்கள் அடிபட்டு கிடந்தால் அவைகளை
பெரியவர்கள் உதவியுடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவோ அவற்றிற்கு மருந்து இடவோ முயற்சிப்பேன்.

பொது அறிவு :

1) நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ?

420 மொழிகள்

2) இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?

பாரத ரத்னா

நீதிக்கதை :வார்த்தை வலிமை

ஒரு கிராமத்தின் வழியாக ஒரு நாள்  ஒரு முனிவர் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண் முனிவரிடம் வந்து  தன் வீட்டின் அருகின் உடல்  நலமில்லாத குழந்தை ஒன்று இருக்கிறது என்றும், அக்குழந்தையை குணமாக்கித்தரும்படியும் முனிவரிடம் மிகப் பணிவுடன் உதவிக் கேட்டாள். உடனே முனிவர் அப்பெண்ணிடம் உடல் நலமில்லாத அக்குழந்தையை அழைத்துவரும்படிக் கூறினார். அந்தப்பெண்ணும் உடல்நலமில்லா அந்தக்குழந்தையை கொண்டுவந்தாள். அந்த முனிவரும் அக்குழந்தையை ஆசிர்வதிப்பது போன்று பிரார்த்தனை செய்தார். எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் குணமாகாத அந்தக்குழந்தை நீங்கள் பிரார்த்தனை செய்வதால் குணமாகி விடுமா என்ன? என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் கூச்சலிட்டான். உனக்கு அது குறித்து என்ன தெரியும்? நீ ஒரு அறிவில்லாத முட்டாள் என முனிவர் அந்த மனிதனைப் பார்த்துக் கூறினார். முனிவர் சொன்ன வார்த்தையைக் கேட்டு அந்த மனிதனுக்கு மிகவும் கோபம் வந்தது. பலரின் முன்னிலையில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்தான். அவனுடைய முகம் கோபத்தால் சிவந்தது. அந்த முனிவரைக் கடுஞ்சொற்களால் எப்படியாவது திட்டி அவர் மனதைக் காயப்படுத்திவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

புன்முறுவலுடன் அவனருகில் வந்த முனிவர், நான் சொன்ன வார்த்தைகளால் நீ கோபமடையவும், சூடாகவும் முடியுமென்றால், நான் கூறும் நல்ல வார்த்தைகள் ஏன் சிலரை குணப்படுத்த முடியாது என்று நினைக்கிறாய்? என்று கேட்டார். அவர் சொன்னதைக் கேட்டப்பிறகு அந்த மனிதனுக்கு வார்த்தைகளின் வலிமை புரிந்தது.

நீதி : நல்லதைப் பேசினால் நிச்சயம்
          நல்லது நடக்கும். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு.


இன்றைய செய்தி துளிகள் : 

1) பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ தேர்வு - அதிகாரிகள் நடவடிக்கை! 

2) ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல கணக்கு வேண்டும்! தேர்தல் நன்னடத்தை விதிகள் வந்தாச்சு!

3) 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை மார்ச் 30-ம் தேதி தொடக்கம்!

4) தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 14 முதல் 29 வரை நடைபெறும் 10 ஆம் வகுப்பு தேர்வை 9.59 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

5) வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த 3வது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.